என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆந்திர சாமியார் யாகம்"
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், திருநேர் அருணாசலேஸ்வரர் சன்னதி எதிரே உள்ள பகுதியில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பொக்குல கொண்ட கைலாச ஆசிரமம் பீடாதிபதி, அட்டயோகிஸ்வரா மவுனிதிகம்பரி ஷட்ட கோபி என்பவர் உலக நன்மைக்காக நிர்வாண யாகம் செய்ய கடந்த 25-ந் தேதி திருவண்ணாமலைக்கு வந்தார்.
இவர் திருநேர் அருணாசலேஸ்வரர் சன்னதிக்கு எதிரே உள்ள பகுதியில் கடந்த 25-ந் தேதி உலக நன்மைக்காக நிர்வாணமாக யாகம் நடத்த தொடங்கினார். இந்த யாகத்தை இவர் 61 நாட்கள் காலை மற்றும் மாலை என இரண்டு வேளையும் தொடர்ந்து நடத்த உள்ளதாக சாதுக்கள் தெரிவித்தனர்.
5-ம் நாளான நேற்று மாலை நிர்வாண யாகத்தில் யோகிஸ்வர மவுனி திகம்பரி ஷட்டகோபி ஈடுபட்டிருந்தார். அப்போது, கிரிவலப்பாதையில் உள்ள சாதுக்கள் சிலர் அவருடன் மந்திரங்கள் ஓதியபடி யாக பூஜையில் ஈடுபட்டனர்.
நிர்வாண பூஜையில் ஈடுபட்டிருக்கும் சாமியார் பேசுவது கிடையாதாம்.
இவர் பேசி 37 வருடங்கள் ஆகிறது எனவும், தான் கூற நினைப்பதை பேப்பரில் எழுதி மட்டுமே காண்பிப்பார் என உடன் வந்த சாதுக்கள் தெரிவித்தனர்.இந்த யாகம் வரும் ஆகஸ்ட் மாதம் 25-ந் தேதியுடன் நிறைவடைய உள்ளதாக தெரிவித்தனர். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சாமியார் உலக நன்மைக்காக நிர்வாண யாகம் நடத்தி வருவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.